Posts

Showing posts from April, 2023

வீட்டுக் கடனில் 7 வகை உள்ளது.. உங்களுக்கான கடன் திட்டம் எது..?

வீட்டுக் கடனில் 7 வகை உள்ளது.. உங்களுக்கான கடன் திட்டம் எது..? தனக்கென  ஒரு வீடு. இது ஒவ்வொரு மனிதனின் முதல் கனவாக இருக்கின்றது. கனவு கண்டால் மட்டும் போதுமா? அதை நனவாக்கும் வழிமுறைகளை அறிந்து அவற்றின் வழியே பயணிக்க தொடங்கினால் மட்டுமே நினைத்ததை அடைய முடியும். நடுத்தர  இந்தியர்களுக்கு ஒரு வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளும் ஒரு எளிய வழி வீட்டுக் கடன். இந்தியாவில் உள்ள தேசிய அல்லது தனியார் வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் பல்வேறு வகையான வீட்டுக் கடன்களை வழங்குகின்றன. உங்களுடைய  தேவைக்கு ஏற்றவாறு, எது உங்களுக்கு மிகவும் உகந்தது என்பதை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஒவ்வொரு வகையிலான வீட்டுக் கடன்களைப் பற்றிய புரிதல் மிகவும் அவசியமாகும். தற்போதைய நிலையில் இந்தியாவில் மட்டும் சுமார் 7 வகையான வீட்டுக் கடன்கள் உள்ளது.  1. நிலம் வாங்குவதற்கான கடன் ஒரு  நிலத்தை தேர்ந்தெடுத்து அதன் பிறகு உங்களுக்கு தேவையான வீட்டை கட்டத் திட்டமிடுகின்றீர்களா? இதற்கு உதவ இந்தியாவில் உள்ள வங்கிகளாலும் அல்லது பிற வங்கி சாராத நிதி நிறுவனங்களாலும் (NBFCs) வீட்டு மனை வாங்க கடன் வழங்கப்படுகின்றது

NRI-களால் புத்துயிர் பெறும் ஆடம்பர ரியல் எஸ்டேட் சந்தை

NRI-களால் புத்துயிர் பெறும் ஆடம்பர ரியல் எஸ்டேட் சந்தை இந்தியாவின் தகவல்  தொழில்நுட்பத் தலைநகரம் என அழைக்கப்படும் பெங்களுரில் ரியல் எஸ்டேட் துறையில் ஒரு புதிய போக்கு நிகழ்ந்து வருகின்றது. கட்டுமான நிறுவனங்கள் சொகுசு வீடு கட்டும் திட்டங்களில் அதிகக் கவனம் செலுத்தி வருகின்றன. வெளி நாடுவாழ் இந்தியர்கள் (NRI) சொகுசுக் குடியிருப்புகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் அதிக ஆர்வம் காட்டுவதுதான் இதற்குக் காரணம் ஆகும். முக்கிய நகரங்கள்   பெங்களுரில்  மட்டும் இந்த நிலைமை இல்லை. மும்பை மற்றும் புனே நகரில் உள்ள கட்டுமான நிறுவனங்களும் சொகுசு வீடு கட்டும் திட்டங்களில் கவனம் செலுத்துகின்றன. இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள ரியல் எஸ்டேட் சட்டத்தின் மூலம் ஏற்பட்டுள்ள சாதகம் மற்றும் பாதகமான அம்சங்களால் இந்நிலை காணப்படுகின்றது. புதுச் சட்டத்தின்படி கட்டுமானத் திட்டங்கள் மிகவும் வெளிப்படையாக இருக்க வேண்டும். திட்ட ஒப்பந்தத்தின் படி வாடிக்கையாளர்கள் மன நிறைவு கொள்ளும் வகையில் கட்டுமானங்கள் அமையாவிட்டால் கட்டுமான நிறுவனங்கள் பொறுப்பு ஏற்கவேண்டும் போன்ற சட்ட விதிகளால் பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள் குடியிருப்புக

உயில் எழுதவில்லை என்றாலும்.. தந்தை சொத்தில் மகளுக்கு பங்கு உண்டு: உறுதி செய்த உச்சநீதிமன்றம்

உயில் எழுதவில்லை என்றாலும்.. தந்தை சொத்தில் மகளுக்கு பங்கு உண்டு: உறுதி செய்த உச்சநீதிமன்றம் புதுடெல்லி: உயில்  எழுதாவிட்டாலும் தந்தையின் சொத்துகளைப் பெற மகள்களுக்கு முழு உரிமை உள்ளது என‌ உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தந்தையின்  சம்பாத்தியம் மற்றும் பரம்பரை சொத்துகள் முறையாக உயில் எழுதாமல் விடும்போது, வாரிசு என்ற முறையில் மகள்களுக்கு முழு உரிமை உள்ளது என மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் 51 பக்கம் தீர்ப்பு எழுதி உத்தரவிட்டுள்ளது. தந்தை  சுயமாக சம்பாதித்த சொத்துகளோ அல்லது பரம்பரை சொத்துகளில் மகள்களுக்கும் பங்கு இருப்பதை தந்தை உயில் எழுதி இருப்பார்.. ஒருவேளை உயில் எழுதாத நிலையில் தந்தை இறந்துவிட்டால் பெண்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்தனர். வழக்கு சென்னை  உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த வியாழக்கிழமை அன்று நீதிபதிகள் அப்துல் நசீர் , கிருஷ்ண முராரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதி

இந்தியர்கள் ஏன் நிலத்தை ஒரு முக்கிய சொத்தாகக் நினைக்குறாங்கன்னு தெரியுமா?

இந்தியர்கள் ஏன் நிலத்தை ஒரு முக்கிய சொத்தாகக் நினைக்கிறாங்கன்னு தெரியுமா? இந்தியப்  புராணங்களிலும் சரி வரலாற்றிலும் சரி, பெரும் போர்களும் பூசல்களும் நிலத்திற்காகவே நடந்தன. எனினும், கதையோ நிஜமோ, வரலாறோ அல்லது நவீனமோ, வீடு வாங்கும் இந்தியர்களில் நிலம் பிடித்தமான தேர்வாக இருக்கிறது. மேற்கத்தியர்கள்  தங்கள் முதலீடுகளை பிற நிலையற்ற சொத்துக்களில் முதலீடு செய்ய முன்னேறியுள்ள நிலையில், வீடு மனை வாங்குவதில் இந்தியர்களின் மனதில் சற்றும் ஐயத்திற்கு இடமின்றி தெளிவான மனநிலை நிலவுகிறது. சாமானியன் விதிவிலக்கல்ல இன்னும்  சொல்லப் போனால், நன்கு கவனித்தால் பல மத்திய அமைச்சர்கள் வைத்துள்ள சொத்துக்களில் பெரும்பாலானவை நிலங்களாகத்தான் இருக்கும். எனவே சாமானியன் இதற்கு ஒன்றும் விதிவிலக்கல்ல. ஏன் அப்படி? டிசைன்  அப்புடி. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்னு சொல்ற மாதிரி, இந்த நிலத்துல முதலீடு செய்வதும் அப்படித்தான். உண்மையில், இந்த வழக்கத்தை இந்தியர்கள் தங்கள் முன்னோரிடமிருந்து கற்றுக் கொண்டுள்ளனர். புதிது புதிதாக பல சொத்து வகைகள் தோன்றினாலும் கண்டுபிடிக்கப்பட்டாலும், இந்த ரியல் எஸ்டேட் எனப்படும் வீடு-மனை முதலீட

இனி வீடு கட்ட வேண்டும் என்றால் அரசு பதிவு பெற்ற என்ஜினியரின் சர்டிபிகேட் அவசியம்!

இனி வீடு கட்ட வேண்டும் என்றால் அரசு பதிவு பெற்ற என்ஜினியரின் சர்ட்டிபிகேட் அவசியம்! சென்னை: தமிழகத்தில்  இனி வீடு கட்ட வேண்டும் என்றால் அரசு பதிவு பெற்ற பொறியாளர்களின் சான்றிதழ் இருந்தால் மட்டுமே வீடு கட்ட முடியும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்  அனுமதி பெறப்பட்டு கட்டப்பட்ட சில கட்டடங்கள் இடிந்து விழுந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளன..  குறிப்பாக சென்னை முகலிவாக்கத்தில் 11 மாடி அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் பலர் உயிரிழந்தனர். அந்த கட்டிடத்தை விலைக்கு வாங்கிய பலரும் செய்வதறியாது திகைத்தனர். இதன் பின்னர் அரசு இது குறித்த நடவடிக்கையில் இறங்கியது. கட்டிடங்கள்  குறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட அரசு இதற்கென கூடுதல் விதிமுறைகளை விதிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக கட்டுமான நிபுணர்கள், சங்கங்கள், அமைப்புகள் போன்ற பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை கேட்ட அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிய உத்தரவை பிறப்பித்தது.  அதன்படி  இனிமேல் தமிழகத்தில் கட்டப்படும் கட்டடங்கள் தமிழக அரசின் பதிவு பெற்ற பொறியாளரின் சான்று பெற்ற பிறகே கட்ட ம

கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் வீடுகளுக்கு நிதியுதவி .. ரியல் எஸ்டேட் துறைக்கு ஜாக்பாட்..!

கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் வீடுகளுக்கு நிதியுதவி .. ரியல் எஸ்டேட் துறைக்கு ஜாக்பாட்..! இந்திய ரியல் எஸ்டேட்  துறையில் பல்வேறு காரணங்களுக்காகத் தேக்கம் அடைந்த வீடு கட்டுமான திட்டங்களை முடிக்க வேண்டும் எனச் சுமார் 3.5 பில்லியன் டாலர் மதிப்பிலான தொகை ஒதுக்கப்பட்டது. இந்த உதவித் தொகையின் மூலம் 2021ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் திட்டங்களை விரைவாகக் கட்டி முடிக்க முடியும். முதற்கட்டமாக  சுமார் 16 திட்டங்களில் அடங்கிய 4000 வீடுகள் ஏப்ரல் 1ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டு வீட்டை வாங்கியவர்கள் கையில் ஒப்படைக்க உள்ளதாக எஸ்பிஐகேப் வென்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரியான இர்பான் காசி தெரிவித்துள்ளார். நவம்பர்  2019ல் Special Window for Completion of Construction of Affordable and Mid-Income Housing Projects (SWAMIH) திட்டத்தின் கீழ் இந்தச் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரியல் எஸ்டேட் துறையில் சுமார் 5 லட்சம் வீடுகள் பல்வேறு காரணங்களுக்காகக் கட்டி முடிக்க முடிக்கப்படாமல் பாதியில் நிற்கிறது.  இதன் மூலம்  இந்திய ரியல் எஸ்டேட் துறையில் சுமார் 4.05 லட்சம் கோடி